ஒருநாள் தொடரை தவறவிடும் முக்கிய இந்திய வேகப்பந்து வீச்சாளர்!

24

 

இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரிட் பும்ரா, இங்கிலாந்து அணிக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை தவறவிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த வாரம் இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்டுக்குப் பிறகு, பும்ரா தனிப்பட்ட காரணங்களால் டெஸ்ட் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

இந்தநிலையில், அவர் எதிர்வரும் ஒருநாள் தொடரையும் தவறவிட நேரிடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. எனினும், இதுதொடர்பான உத்தியோகபூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

இதனிடையே ஒரு வாரத்திற்கு முன்னர் தேசிய கிரிக்கெட் அகாடமியில் (என்.சி.ஏ) நடத்தப்பட்ட உடற்பயிற்சி சோதனையில் சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தி தோல்வியுற்றதை பி.சி.சி.ஐ மற்றும் குழு அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

SHARE