முக்கிய அப்டேட்டை வெளியிட்டார் இயக்குனர் சீனு ராம்சாமி!

33

 

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘மாமனிதன்’ திரைப்படத்தின் முக்கிய அப்டேட்டை இயக்குனர் சீனு ராம்சாமி வெளியிட்டுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ருவிட்டர் பதிவில், “ ‘மாமனிதன் தலைப்பு ஏற்கனவே தயாரிப்பாளர் ஜெயசீலன் என்பவரிடம் இருந்தது. அதை முறைப்படி யுவன் சங்கர் ராஜா இரண்டு நாட்களுக்கு முன்பு பெற்றார்.

ஆகவே மாமனிதன் படத்தின் தலைப்பு எங்கள் படத்திற்கு உறுதியானது. தலைப்பு பெற்றதால் முதல் பார்வை,  பாடல் விரைவில் வெளியாகும்’ எனத் தெரிவித்துள்ளார்.

சீனு ராமசாமி – விஜய் சேதுபதி கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்த படம் ‘மாமனிதன்’. இப்படத்தை இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தயாரித்துள்ளார்.

இதில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக காயத்ரி நடித்துள்ளார். இந்தப் படத்திற்கு இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இணைந்து இசை அமைத்துள்ளனர்.

SHARE