டெல்லியில் ஆறு மணிநேர மறியல் போராட்டம் – விவசாய சங்கம் அழைப்பு!

25

 

மார்ச் ஆறாம் திகதி டெல்லி மேற்குப் புறவழிச் சாலையில் ஆறு மணிநேரம் மறியல் போராட்டம் நடத்தவுள்ளதாக விவசாய சங்கத் தலைவர் அறிவித்துள்ளார்.

புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக்கோரி டெல்லியின் எல்லைப் பகுதியான சிங்கு, திக்ரி, காசிப்பூர் ஆகிய இடங்களில் விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தப் போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்தும் வகையில் மார்ச் ஆறாம் திகதி பகல் 11 மணி முதல் மாலை 5 மணி வரை குண்ட்லி – மானேசர் – பால்வால் இடையான டெல்லி மேற்குப் புறவழி விரைவுச் சாலையில் மறியலில் ஈடுபடத் திட்டமிட்டுள்ளனர்.

இந்த நிலையில், இந்தப் போராட்டத்தில் பங்கேற்கப் பஞ்சாப், அரியானா, உத்தரப்பிரதேச மாநில விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

SHARE