கூட்டணியை பலவீனப்படுத்தும் வகையில் சுதந்திரக் கட்சியினர் செயற்படுகின்றனர்

19

 

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான கூட்டணியை பலவீனப்படுத்தும் வகையில் சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் கருத்து தெரிவித்து வருவதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.

கூட்டணிக்குள் காணப்படும் பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தை ஊடாக மாத்திரமே தீர்வு கிட்டும் என்றும் கூட்டணியின் உறுப்பினர்கள் அனைவரும் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

கொழும்பில் (புதன்கிழமை) இடம்பெற்ற நிகழ்வினை அடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், சுதந்திர கட்சியின் ஒரு தரப்பினர் அரசாங்கத்தில் இருந்து வெளியேற தீர்மானித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

குறித்த சுதந்திர கட்சியின் ஒரு தரப்பினரது செயற்பாடு குறித்து கூட்டணியின் உயர்மட்ட தலைவர்களுடன் பேச்சுவார்த்தையினை மேற்கொள்ளவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தில் இணைந்து பயணிக்க வேண்டும் எனக் கருதியே சுதந்திர கட்சிக்கு மக்கள் ஆதரவை வழங்கினார்கள் என்றும் அந்த ஆணைக்கு அவர்கள் மதிப்பளித்து செயற்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

SHARE