சிறுமிக்கு பாலியல் துஸ்பிரயோகம்: 12 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவு

23

 

16 வயது சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த குற்றத்திற்காக தனியார் சிறுவர் பராமரிப்பு இல்லத்தில் உள்ள ஒருவருக்கு 12 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பாக வழங்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் குறித்த நபர் கைது செய்யப்பட்டதாக தேசிய சிறுவர்கள் பாதுகாப்பு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதனை அடுத்து இந்த சம்பவம் குறித்து கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் சட்டமா அதிபரால் தாக்கல் செய்ய்யப்பட்ட வழக்கு இன்று (புதன்கிழமை) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது நீதிமன்றம் சந்தேக நபருக்கு 12 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்ததுடன் பாதிக்கப்பட்டவருக்கு 250,000 ரூபாய் இழப்பீட்டை வழங்கவும் உத்தரவிட்டது.

பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு வழங்க சந்தேக நபர் தவறினால் தண்டனைக் காலத்திற்கு மேலதிகமாக 04 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்றும் நீதிமன்றம் அறிவித்தது.

புறக்கோட்டையைச் சேர்ந்த குறித்த நபருக்கு 10,000 ரூபாய் அபராதமும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

SHARE