ஹிஸ்புல்லாஹ்வின் விளக்கமறியல் மீண்டும் நீடிப்பு

25

 

சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் மற்றும் புத்தளம் மதரசா பாடசாலையின் அதிபரை எதிர்வரும் 18 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

கோட்டை நீதவான் நீதிமன்றில் குறித்த சந்தேகநபர்கள் (புதன்கிழமை) முற்படுத்தப்பட்ட போது குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தாக்குதல் தொடர்பிலான தாக்குதல்தாரிகளுடன் தொடர்பு எனத் தெரிவித்து, சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு கடந்த 10 மாதங்களுக்கு மேலாக சி.ஐ.டி. யினால் ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வுக்கு ஒத்துழைப்பு வழங்கியதாக தெரிவித்து, புத்தளம் மதரசா பாடசாலை அதிபர் மொஹமட் சகீல் என்பவரும் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

SHARE