வெண் சந்தனம், பாலை மரக் குற்றிகளுடன் வாகனம் பறிமுதல்!

25

பூநகரிப் பகுதியில் கடத்தல் மரங்களுடன் சென்ற வாகனமொன்று இராணுவத்தினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கை நேற்று (புதன்கிழமை) இரவு இடம்பெற்றதுடன், சந்தேகநபர்கள் வாகனத்தை அவ்விடத்தில் விட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.

சங்குப்பிட்டி – பூநகரி இடையிலான இராணுவத்தின் வீதித் தடைப் பகுதியில் குறித்த வாகனம் நிறுத்தாமல் சென்ற நிலையில், இராணுவத்தின் நடவடிக்கையில் வாகனம் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதன்போது, கிட்டத்தட்ட நூறு அளவிலான வெண் சந்தனம் மற்றும் பாலை மரக்குற்றிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்நிலையில், இவற்றை பொலிஸாரிடம் ஒப்படைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

SHARE