இன்னல்களுக்கு உள்ளான 56 குடும்பங்களுக்கு நஸ்டஈடு வழங்கிவைப்பு!

28

 

மன்னார் மாவட்டத்தில் இன்னல்களுக்கு உள்ளான மக்களுக்கான நஸ்ட ஈடு மன்னார் மாவட்டச் செயலகத்தில் வைத்து நேற்று (புதன்கிழமை) வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

இழப்பிட்டுக்கான அலுவலகத்தின் ஏற்பாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் தலைமையில் மன்னார் மாவட்டத்தில் இன்னல்களுக்கு உள்ளான 56 குடும்பங்களுக்கு முதல் கட்டமாக நஸ்ட ஈடு வழங்கி வைக்கப்பட்டது.

இரண்டு மில்லியன் 62 ஆயிரத்து 431 ரூபாய் இவ்வாறு 56 குடும்பங்களுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. மேலும் பாதிப்புக்குள்ளான 3 இந்து ஆலயங்களுக்கும் நஸ்ட ஈடாக சுமார் 7 லட்சத்து 2500 ரூபாவும் உத்தியோக பூர்வமாக வழங்கப்பட்டது.

வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மன்னார் முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கமைப்பு குழு தலைவருமான காதர் மஸ்தான் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினரும் இணை தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் , மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர்  ஸ்ரான்லி மேல் உள்ளிட்ட இழப்புக்கான அலுவலக உத்தியோகத்தர்கள் மற்றும் திணைக்கள உத்தியோகத்தர்கள் உட்பட 56 பொது மக்கள் மற்றும் 3 இந்து ஆலயங்களில் தர்மகர்த்தாக்கள் குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு காசோலையை பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்

SHARE