ஆண்ட்ரெஸ்கு, சக்கரி, ஒசாகா காலிறுதிக்கு முன்னேற்றம்!

22

 

மியாமி பகிரங்க டென்னிஸ் தொடரின் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு நான்காவது சுற்றுப் போட்டியில், ஆண்ட்ரெஸ்கு, சக்கரி மற்றும் ஒசாகா ஆகியோர் வெற்றிபெற்று காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.

பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு நான்காவது சுற்றுப் போட்டியொன்றில், கனடாவின் பியான்கா ஆண்ட்ரெஸ்கு, ஸ்பெயினின் கர்பீன் முகுருசாவை எதிர்கொண்டார்.

பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில், ஆண்ட்ரெஸ்கு 3-6, 6-3, 6-2 என்ற செட் கணக்குகளில் வெற்றிபெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.

இதன்மூலம் நாளை நடைபெறும் காலிறுதிப் போட்டியில், ஆண்ட்ரெஸ்கு, ஸ்பெயினின் சாரா சோரிப்ஸ் டார்மோவை எதிர்கொள்ளவுள்ளார்.


இன்னொரு பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு நான்காவது சுற்றுப் போட்டியொன்றில், கிரேக்கத்தின் மரியா சக்கரி, அமெரிக்காவின் ஜெசிகா பெகுலாவுடன் மோதினார்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில், மரியா சக்கரி, 6-4, 2-6, 7-6 என்ற செட் கணக்குகளில் வெற்றிபெற்று காலிறுதிக்குள் நுழைந்தார்.


மற்றொரு பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு நான்காவது சுற்றுப் போட்டியொன்றில், ஜப்பானின் நவோமி ஒசாகா, பெல்ஜியத்தின் எலீஸ் மெர்டன்சுடன் பலப்பரீட்சை நடத்தினார்.

பெரும் எதிர்பார்ப்பு மிக்க இப்போட்டியில், நவோமி ஒசாகா, 6-3, 6-3 என்ற நேர் செட் கணக்குகளில் வெற்றிபெற்று காலிறுதிக்குள் அடியெடுத்து வைத்தார்.

நாளை நடைபெறும் காலிறுதிப் போட்டியில், நவோமி ஒசாகா, கிரேக்கத்தின் மரியா சக்கரியுடன் மோதவுள்ளார்.

SHARE