தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டமைக்கு நன்றி

20

 

தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளமைக்கு நடிகர் ரஜினிகாந்த் நன்றி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ இந்திய திரையுலகின் மிக உயரிய தாதா சாகேப் பால்கே விருதை வழங்கிய மத்திய அரசிற்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

என்னில் இருந்த நடிப்புத் திறமையை கண்டுபிடித்து என்னை ஊக்குவித்த என்னுடைய பேருந்து ஓட்டுனரான நண்பன் ராஜ் பகதூருக்கும், வறுமையில் வாடும்போதும் என்னை நடிகனாக்க பல தியாகங்கள் செய்த என் அண்ணன் சத்யநாராயணா ராவ் கெய்க்வாட்டிற்கும், திரையுலக தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள், ஊடகங்கள், என்னை வாழ வைத்த தெய்வங்களான தமிழ் மக்களுக்கும், உலகெங்கிலும் உள்ள என் இரசிகர்களுக்கும் இந்த விருதினை சமர்ப்பிக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

SHARE