சிகையலங்கார நிலையங்கள் மீண்டும் திறப்பு!

15

 

ஸ்கொட்லாந்தில் சிகையலங்கார நிலையங்கள், வீட்டு உபகரண கடைகள் மற்றும் தோட்ட மையங்கள் மீண்டும் திறக்கப்படுகின்றன.

பொருளாதாரத்தின் மீதான கொவிட்-19 கட்டுப்பாடுகள் தளத்தப்படும் நிலையில், இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது.

Non-essential click மற்றும் collect services மீண்டும் தொடங்க அனுமதிக்கப்படுகின்றன.

ஸ்கொட்லாந்தில் மூன்று மாதங்களுக்கும் மேலாக நடைமுறையில் இருந்த தனிமைப்படுத்தல் (வீட்டில் இருத்தல்) கட்டுப்பாடுகள் வெள்ளிக்கிழமை நீக்கப்பட்டது.

மீண்டும் திறக்கும் பிற வணிகங்களில் குழந்தை உபகரண கடைகள் மற்றும் மின் பழுது பார்க்கும் கடைகள் ஆகியவை அடங்கும்.

இதுகுறித்து துணை முதலமைச்சர் ஜோன் ஸ்வின்னி, வைரஸ் இன்னும் பரவி வருவதை நினைவில் வைத்துக் கொள்ளவும், தொடர்ந்து விதிகளை பின்பற்றவும் என அவர் மக்களை கேட்டுக்கொண்டார்.

SHARE