கொவிட்-19 தொற்றிலிருந்து 15இலட்சத்துக்கும் மேற்பட்டோர் மீண்டுள்ளனர்!

13

 

பெருவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றிலிருந்து 15இலட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர்.

அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, பெருவில் 15இலட்சத்து 582பேர் பூரண குணமடைந்துள்ளனர்.

உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 17ஆவது நாடாக விளங்கும் பெருவில், இதுவரை 15இலட்சத்து 82ஆயிரத்து 367பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், எட்டாயிரத்து 406பேர் பாதிக்கப்பட்டதோடு 252பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 28ஆயிரத்து 908பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் இரண்டாயிரத்து 307பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

SHARE