வசூலில் சாதனை படைக்கும் சுல்தான்

17

 

நடிகர் கார்த்தி, ராஷ்மிகா மந்தனா, நெப்போலியன், லால், அபிராமி, யோகிபாபு, சதீஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள சுல்தான் திரைப்படம்  மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

வசூல் ரீதியாக மட்டும் இல்லாமல் மக்களின் மனதிலும் நிற்கும் படமாக இந்தப் படம் அமைந்துள்ளது.

பாக்யராஜ் கண்ணம் இயக்கத்தில் கார்த்தி நடித்திருக்கும் இப்படத்திற்கு நல்ல விமர்சனங்களும் கிடைத்துள்ளன.

படம் 3 நாட்களில் தமிழ்நாட்டில் மட்டும் இதுவரை 15 கோடி ரூபாய் வசூலித்துள்ளதோடு,  உலகம் முழுவதும் இதுவரை 24 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது.

இந்த நிலையில், இப்படத்தின் ‘யாரையும் இவ்ளோ அழகா பாக்கல..’  வீடியோ பாடல் வெளியாகியுள்ளது.

இந்தப் பாடலுக்கும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

SHARE