காணி அளவீடு மக்களின் எதிர்ப்பையடுத்து இடைநிறுத்தம்!

18

 

யாழ்ப்பணம் எழுதுமட்டுவாழ் வடக்கில் மக்களுக்குச் சொந்தமான காணியை அளவிடும் நடவடிக்கை தடுக்கப்பட்டுள்ளது.

இராணுவத்தின் 52ஆவது படையணியின் தலைமையகம் அமைப்பதற்காக குறித்த காணியைச் சுவீகரிப்பதற்கு அளவீடுசெய்ய முயற்சிக்கப்பட்டது.

இதன்போது, ஏ-9 பிரதான வீதியை மறித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் அளவீட்டு நடவடிக்கை தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

இந்த எதிர்ப்பு நடவடிக்கையில் மக்களுடன் இணைந்து வட மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கமும் கலந்துகொண்டிருந்தார்.

SHARE