ரூ. 1000 சம்பளம்; தொழில் அமைச்சர் உட்பட 20 பேருக்கு அழைப்பாணை

19
தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 1000 ரூபாவாக தீர்மானித்து அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட வர்த்தமானியை செல்லுபடியற்றதாக்கக் கோரி தோட்டக் கம்பனிகளினால் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு மீதான விசாரணையை எதிர்வரும் மே 5 ஆம் திகதி மேற்கொள்வதற்கு மேன் முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

அன்றைய தினம் பிரதிவாதிகளான தொழிலமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, தொழில் ஆணையாளர் நாயகம் உள்ளிட்ட தரப்பினரை விடயங்களை முன்வைக்கும் வகையில் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று பிரதிவாதிகளுக்கு அழைப்பாணை விடுத்துள்ளது.

SHARE