தமிழகத்தில் அதிகரித்த வெப்பநிலை குறையும்

18

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் வெளியிட்ட செய்திக்குறிப்பில், தெற்கு மற்றும் தென் கிழக்கு திசைகளில் இருந்து, தமிழக பகுதிகளில் காற்று வீச வாய்ப்பு உள்ளதால், கடலோர மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை, முந்தைய நாட்களை விட, 3 டிகிரி செல்ஷியஸ் வரை குறைய வாய்ப்புள்ளது.நேற்றும், இன்றும் சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருப்பூர், திண்டுக்கல் மற்றும் கோவையில், அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட, 4 டிகிரி செல்ஷியஸ் வரை உயரும்.

வட கடலோர மாவட்டங்களில், 3 டிகிரி செல்ஷியஸ் வரை உயரும்.தெற்கு மற்றும் தென் கிழக்கு திசை காற்றால், வெப்பநிலை குறைய வாய்ப்பு உள்ளதால், வரும் 7, 8ல் அதிகபட்ச வெப்பநிலை, இயல்பை விட, 2 டிகிரி செல்ஷியஸ் வரை மட்டுமே உயரும்.நேற்று காலை நிலவரப்படி, கடந்த 24 மணி நேரத்தில் வெம்பக்கோட்டையில், 3 செ.மீ., மழை பெய்து உள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SHARE