ஐபோன் 13 சீரிஸ் செப்டம்பர் மாதம் வெளியாகும்!

116

 

ஆப்பிள் நிறுவனம் 2021 ஐபோன் சீரிஸ் மாடல்கள் திட்டமிட்டப்படி ஐபோன் 13 சீரிஸ் தாமதமாகாது என தற்போது வெளியான தகவல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் ஐபோன் 13 சீரிஸ் செப்டம்பர் மாத வாக்கில் வெளியாகும் என கூறப்படுகிறது. முன்னதாக வெளியான தகவல்களில் படி சிப் உற்பத்தியில் தாமதம் ஏற்படுவதால், ஐபோன் 13 சீரிஸ் வெளியீடு தாமதமாகும் என கூறப்பட்டு இருந்தது.

இருப்பினும் ஆப்பிள் ஏ15 பயோனிக் சிப்செட் உற்பத்தி துவங்கிவிட்டதாக கூறப்படுகிறது. இதே சிப்செட் புதிய ஐபோன் 13 சீரிஸ் மாடல்களில் வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

SHARE