இலங்கை துடுப்பாட்டகாரரின் உடல்நிலை குறித்து வெளியான முக்கிய தகவல்

37

 

காயமடைந்த இலங்கை துடுப்பாட்டகாரர் பானுக ராஜபக்ச உடல்நிலை குறித்து இலங்கை கிரிக்கெட் முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்தியா அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் அறிமுகமான பானுக ராஜபக்ச முதல் பந்திலேயே சிக்சர் பறக்கவிட்டு அசத்தினார்.

முதல் ஒரு நாள் போட்டியில் 2 சிக்சர் 2 பவுண்டரி என 24 ஓட்டங்கள் எடுதத்த பானுக, 2வது நாள் ஒரு நாள் போட்டியில் டக் அவுட்டானார்.

இந்நிலையில், முழங்கால் சுளுக்கு ஏற்பட்டதால் பானுகவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது.

இந்தியாவுக்கு எதிரான 3வது ஒரு நாள் போட்டியில் அவர் இடம்பெறுவது சந்தேகமாக இருந்தது.

இந்நிலையில், பானுக உடல்நிலை குறித்து இலங்கை கிரிக்கெட் முக்கிய தகவல் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், பானுக முழங்கால் சுளுக்கில் இருந்து மீண்டுவிட்டார், இந்தியாவுக்கு எதிரான 3வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டிக்கான அணித்தேர்வில் அவர் பங்கேற்பார் என இலங்கை கிரிக்கெட் ட்விட்டரில் தெரிவித்துள்ளது.

SHARE