வவுனியா வைத்தியசாலையில் கோவிட் தொற்றால் ஒருவர் மரணம்

32

 

வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நபர் ஒருவர் கோவிட் தொற்று நோயால் இன்று (23) மரணமடைந்துள்ளார்.

குறித்த நபர் சுகவீனம் காரணமாக வவுனியா வைத்தியசாலையில் அண்மையில் அனுமதிக்கப்பட்டார்.

இதன்போது முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையில் கோவிட் தொற்றுக்குள்ளானமை உறுதிப்படுத்தப்பட்டது.

இதனையடுத்து வைத்தியசாலையின் கோவிட் விடுதியில் அவர் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

எனினும் சிகிச்சை பலனின்றி அவர் இன்றையதினம் மரணமடைந்துள்ளார்.

வவுனியா ஶ்ரீநகர் பகுதியை சேர்ந்த 38 வயதான குடும்பஸ்தரே இவ்வாறு மரணமடைந்தவராவார்.

SHARE