அராலியில் வன்முறைக் குழு அட்டூழியம்! – ஓட்டோவுக்கும் தீ

35

 

யாழ்.வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அராலி வடக்குப் பகுதியிலுள்ள வீடொன்றில் வாள்வெட்டுக் குழுவினரால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

நேற்றிரவு 10.45 மணியளவில் இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வாள்கள் மற்று இரும்புக் கம்பிகளுடன் வந்த நால்வர் வீட்டு ஜன்னலின் கண்ணாடிகள் மற்றும் ஓட்டோவின் கண்ணாடிகளை உடைத்துடன் ஓட்டோவுக்கும் தீ மூட்டியுள்ளனர். இதனால் ஓட்டோ பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

வீட்டில் உள்ளவர்கள் தூக்கத்தில் இருந்தவேளை குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் நிகழும்போது விழித்துக்கொண்ட வீட்டுக்காரர்களும் அயல்வீட்டினரும் இணைந்து வன்முறைக் குழுவினரைத் துரத்தியவேளை அவர்கள் தப்பித்துச் சென்றுள்ளனர். இது தொடர்பாக வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வட்டுக்கோட்டைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE