அரியாலையில் பொலிஸார் துப்பாக்கி சூடு; தெறித்து ஓடிய கும்பல்!

30

 

யாழ்.அரியாலை கிழக்கு பூம்புகார் பகுதியில் பொலிஸார் மணல் கடத்தல் கும்பலை இலக்கு வைத்து பொலிஸார் துப்பாக்கி சூடு நடத்தியதில் கொள்ளையர்கள் தெறித்து ஓடியுள்ளனர்.

குறித்த பகுதியில் மணல் கடத்தல் கும்பலின் அட்டகாசம் அதிகரித்துவரும் நிலையில் இன்று அதிகாலை 1 மணியளவில் மணல் கடத்தல் கும்பல் மீது பொலிஸார் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.

மணல் கடத்தல்காரர்கள் பயணித்த உழவு இயந்திரம் ஒன்றை பொலிஸார் வழிமறித்து கைது செய்ய முயன்றபோது கட்டுப்பாட்டை மீறி உழவு இயந்திரம் பயணித்த நிலையில் பொலிஸார் உழவு இயந்திரம் மீது துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.

இதனையடுத்து உழவு இயந்திரம் தடம்புரண்ட நிலையில் அதில் பயணித்த மணல் கள்ளர்கள் 3 பேர் தப்பி ஓடியுள்ளனர்.

இந்நிலையில் தற்போது தப்பி ஓடியவர்களை கைது செய்யும் நடவடிக்கை துரிதப்படுத்தப்பட்டிருப்பதுடன், சம்பவத்தில் கைவிடப்பட்ட உழவு இயந்திரம் பொலிஸாரினால் கையகப்பட்டுத்தப்பட்டுள்ளது.

 

SHARE