கனடாவின் தேசிய பூங்கா ஒன்றில் முதல் முறையாக காணப்பட்ட காட்டு பன்றிகள்

14

 

ஆல்பர்ட்டா மாகாணத்தில் உள்ள தேசிய பூங்கா ஒன்றில் முதல் முறையாக மிகவும் ஆபத்தான காட்டு பன்றிகள் காணப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

காட்டு பன்றிகள் பொதுவாக விளை நிலங்களில் புகுந்து கிழங்கு வகைகள் முதல் பறவைகளின் முட்டை வரையில் தின்று முடித்துவிடும். இவைகள் எட்மண்டனுக்கு கிழக்கே எல்க் தீவு தேசிய பூங்காவில் சாதாரணமாக கண்டு வருகிறது என்கிறார்கள்.

இந்த நிலையில் பொதுமக்களுக்கு புகைப்படம் எடுக்கவும் வீடியோ பதிவுக்கும் அனுமதி அளித்துள்ள நில உரிமையாளர்கள், காட்டு பன்றி ஒன்று சமீப நாட்களாக இப்பகுதியில் காணப்படுவதாக தெரிவித்துள்ளனர்.

1990 காலகட்டத்தில் ஆல்பர்ட்டா மற்றும் Saskatchewan பகுதிகள் பண்ணை நிலங்களின் பயன்பாட்டுக்காக காட்டு பன்றிகள் கொண்டுவரப்பட்டன. தற்போது Saskatchewan-ன் 296 கிராமப்புற நகராட்சிகளில் பாதிக்கும் மேற்பட்ட பகுதிகளில் காட்டு பன்றிகள் காணப்படுகின்றன.

ஆல்பர்ட்டாவை பொறுத்தமட்டில் 28 மாவட்டங்களில் காட்டு பன்றிகள் காணப்படுவதாக தெரிய வந்துள்ளது. மேலும், ஆண்டு தோறும் காட்டு பன்றிகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுவதாகவே கூறப்படுகிறது.

2007ல் அமெரிக்கா முன்னெடுத்த ஆய்வு ஒன்றில், ஆண்டுக்கு 2 பில்லியன் டொலர் அளவுக்கு சேதத்தை காட்டு பன்றிகள் ஏற்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE