ஆர்.சி.பி தோல்வி! கோபத்தில் அந்த அணி வீரரின் கர்ப்பிணி மனைவியை மோசமாக விமர்சித்த ரசிகர்கள்

22

 

ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணியின் தோல்வி காரணமாக அந்த அணியின் முக்கிய வீரரின் மனைவியை ரசிகர்கள் தேவையில்லாமல் விமர்சித்துள்ளனர்.

ஐபிஎல் தொடரின் முதல் குவாலிஃபையர் போட்டியில் கொல்கத்தா அணியிடம் 4 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது ஆர்சிபி. இதனால் இந்தாண்டும் அந்த அணியின் கோப்பை வெல்லும் கனவு தகர்ந்தது.

அந்த போட்டியில் ஆர்சிபி வெற்றி பெறுவதற்கு வலுவான நிலையில் இருந்தது. எனினும் டேன் கிறிஸ்டியன் வீசிய மூன்றே பந்தில் ஒட்டுமொத்த ஆட்டமும் கேகேஆர் பக்கம் சென்றது. அதாவது டேன் கிறிஸ்டியன் வீசிய 12வது ஓவரில் சுனில் நரேன் தொடர்ச்சியாக 3 சிக்ஸர்களை பறக்கவிட்டு அதிர்ச்சி கொடுத்தார். இது அந்த அணி வெற்றி பெறுவதற்கு திருப்புமுனையாக இருந்தது.

இந்நிலையில் ஆர்சிபியின் தோல்விக்கு காரணம் டேன் கிறிஸ்டியன் தான் எனக்கூறி ரசிகர்கள் மிக மோசமாக அவரை விமர்சித்து வருகின்றனர். இதில் எல்லை மீறிய சில ரசிகர்கள், டேன் கிறிஸ்டியன் மனைவியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிக மோசமாகவும், வன்மமான கருத்துக்களையும் பதிவிட்டு வருகின்றனர். அவர் தற்போது கர்ப்பிணியாக உள்ளார்.அவரின் உடல்நிலையையும் கருத்தில் கொள்ளாமல் சில ரசிகர்கள் சீண்டியுள்ளனர். இதனால் கிறிஸ்டியனின் மனைவி மிக வருத்தத்தில் இருப்பதாக தெரிகிறது.

மனம் கலங்கிய கிறிஸ்டியன் இந்த சம்பவம் குறித்து வெளியிட்ட பதிவிட்டுள்ள டேன் கிறிஸ்டியன், எனது மனைவியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை பாருங்கள். கேகேஆர் அணிக்கு எதிரான போட்டியில் நான் சொதப்பிவிட்டேன் தான். ஆனால் விளையாட்டில் அது சகஜம்.

இதற்காக எனது மனைவியை மோசமாக பேசாதீர்கள். அவரை தொடர்ந்தரவு செய்யாதீர்கள் என மனம் வருந்தி கேட்டுள்ளார். சில ரசிகர்கள் வீரர்களை இப்படி கொச்சையாக விமர்சித்ததற்கு, பல ஆர்சிபி ரசிகர்கள் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகிறார்கள்.

SHARE