ஏஞ்சலோ மேத்யூஸ் குறித்து இலங்கை கிரிக்கெட் வெளியிட்ட முக்கிய தகவல்

19

 

இலங்கை முன்னாள் கேப்டன் ஏஞ்சலே மேத்யூஸ் குறித்து இலங்கை கிரிக்கெட் வாரியம் முக்கய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

இலங்கையின் முன்னாள் கேப்டன் ஏஞ்சலோ மேத்யூஸ் வரவிருக்கும் சுற்றுப்பயணங்களுக்கான தேர்வுகளுக்குத் தயாராக இருப்பதாக இலங்கை கிரிக்கெட்டு வாரியத்திடம் அறிவித்துள்ளார்.

அதன்படி, உடனடி நடைமுறைக்கு வரும் வகையில், எதிர்கால சர்வதேச சுற்றுப்பயணங்களில் கவனம் செலுத்த மேத்யூஸ் உயர் செயல்திறன் மையத்தில் பயிற்சி மேற்கொண்டு வரும் அணியில் இணைவார் என இலங்கை கிரிக்கெட் அறிவித்துள்ளது.

தனிப்பட்ட காரணங்களுக்காக, மேத்யூஸின் வேண்டுகோளை அடுத்து, ஜூலை 2021 மாதத்தில் அவர் தேசிய கடமைகளிலிருந்து விடுவிக்கப்பட்டார் என்பது நினைவுக் கூரத்தக்கது.

 

SHARE