ரஷ்யாவில் மீண்டும் புதிய உச்சத்தைத் தொட்டும் நாளாந்தம் மரண எண்ணிக்கை!

17

 

ரஷ்யாவில் நாளாந்தம் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை மீண்டும் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரஷ்யாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 28, 717 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 984 பேர் கொரோனாவால் மரணமடைந்துள்ளனர்.

ரஷ்யாவில் இதுவரையில் 78இலட்சத்து 61 ஆயிரத்து 681 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 2இலட்சத்து 19 ஆயிரத்து 329 பேர் மரணமடைந்துள்ளனர்.

இந்நிலையில் ரஷ்யாவில் நாளாந்தம் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை சில வாரங்களாக புதிய உச்சங்களைத் தொட்டு வருகின்றது.

இங்கு கொரோனா தடுப்பூசி திட்டம் தேவையை விட மந்தமாக செயல்படுத்தப்படுவதால் இவ்வாறு நாளாந்தம் மரண எண்ணிக்கை அதிகரித்து வருவதாகக் கூறப்படுகின்றது.

இதுவரையில் கொரோனா தொற்றில் 69இலட்சத்து 16 ஆயிரத்து 86 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 2,300 பேர் கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.

SHARE