ரொறன்ரோவில் 50,000 குடிமக்களை நேரடியாக தொடர்பு கொள்ளும் நிர்வாகம்:

15

 

ரொறன்ரோவில் கொரோனா தடுப்பூசி இரண்டாவது டோஸ் போட்டுக்கொள்ள தாமதிக்கும் 50,000 மக்களை நேரடியாக தொடர்பு கொள்ள நகர நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் முழுமையாக தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் மற்றும் ஒரு டோஸ் மட்டும் போட்டுக்கொண்டவர்கள் இடைவெளியை குறைக்கலாம் என நகர நிர்வாகம் கருதுகிறது.

ரொறன்ரோ குடிமக்களில் 123,000 பேர்கள் கொரோனா தடுப்பூசியில் ஒரு டோஸ் மட்டுமே போட்டுக்கொண்டுள்ளனர். இதில் 48,200 பேர்கள் இரண்டாவது டோஸ் தடுப்பூசி போட்டுக்கொள்ள தாமதிப்பதாக தெரிய வந்துள்ளது.

இந்த நிலையில், இரண்டாவது டோஸ் போட்டுக்கொள்ள தாமதிக்கும் ஒவ்வொருவரையும் தொலைபேசி வாயிலாகவோ குறுந்தகவல் வாயிலாகவோ தொடர்பு கொள்ள நகர நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

இதில் தடுப்பூசி போட்டுக்கொள்ள ஏதேனும் உதவி தேவைப்படுமா? சிறார்களை கண்காணிக்க வேண்டுமா? அல்லது உரிய செவிலியர்களை தொடர்பு கொண்டு சந்தேகங்களை நிவர்த்தி செய்ய வேண்டுமா? உள்ளிட்ட கேள்விகள் முன்வைக்கப்படும் என தெரிய வந்துள்ளது.

வணிக வளாகங்கள், பிளாசாக்களில் 22 சிறு சுகாதார மையங்களும் ஏற்படுத்த முடிவு செய்துள்ளதாக நகர நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ரொறன்ரோ மக்களில் 86 சதவீதம் பேர்கள் ஒரு டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். 82 சதவீதம் மக்கள் முழுமையாக தடுப்பூசி போட்டுகொண்டுள்ளதாக சுகாதாரத்துறையால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE