தோல்விக்கு பின் கண்கலங்கிய டெல்லி வீரர்கள்! பேச முடியாமல் கண்ணீர் விட்ட ரிஷப்:

19

 

கொல்கத்தா அணிக்கெதிரான போட்டியில் தோல்விக்கு பின் டெல்லி அணி வீரர்கள் பலர் கண்ணீர் விட்டு அழுத புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.

ஐபிஎல் தொடரின் இன்றைய இரண்டாவது குவாலிபயர் போட்டியில் ரிஷப் பாண்ட் தலைமையிலான டெல்லி அணியும், இயான் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா அணியும் மோதின.

பரபரப்பான இப்போட்டியின் கடைசி ஓவரின் 5-வது பந்தில் கொல்கத்தா அணி த்ரில் வெற்றி பெற்றது.

ஒரு கட்டத்தில் போட்டியே கையை விட்டு சென்ற நிலையில், அதன் பின் டெல்லி அணி வீரர்கள் தங்களுடைய தரமான பவுலிங் மூலம் மீண்டும் ஆட்டத்தை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து நுலிழையில் டெல்லி வெற்றியை தவறவிட்டது.

இந்நிலையில், போட்டி முடிந்த பின்பு டெல்லி வீரர்கள் பலரும் மைதானத்தில் கண்ணீர் விட்டு அழுதனர். அணியின் தலைவரான ரிஷப் பாண்ட் போட்டி முடிந்த பின்பு, வந்து பேசும் போது அழுதுவிட்டார். இந்த வீடியோக்கள் இணையத்தில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.

SHARE