இது தான் தரமான ஐபிஎல் போட்டி! கொல்கத்தாவை கடைசி ஓவரி கதற விட்ட அஸ்வின்:

20

 

டெல்லி அணிக்கெதிரான போட்டியில் கொல்கத்தா அணி கடைசி ஓவரில் த்ரில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் டெல்லி மற்றும் கொல்கத்தா அணிகள் மோதின.

இப்போட்டியில் வெற்றி பெறும் அணி, வரும் 15-ஆம் திகதி சென்னை அணியுடன் இறுதிப் போட்டியில் மோதும். இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தது.

அதன் படி டெல்லி அணிக்கு துவக்க வீரர்களான பிரிதிவ் ஷா 18 ஓட்டங்கள் எடுத்த நிலையிலும், ஷிகார் தவான் 36 ஓட்டங்கள் எடுத்த நிலையிலும் வருண் சக்ரவர்த்தி சூழலில் வெளியேற, அடுத்து வந்த வீரர்களும் சொற்ப ஓட்டங்களில் பவுலியன் திரும்பியதால், டெல்லி அணி இறுதியாக 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 135 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.

கொல்கத்தா அணியில் அதிகபட்சமாக வருண்சக்ரவர்த்தி 4 ஓவர் வீசி 2 விக்கெட்டுகள் வீழ்த்தி 26 ஓட்டங்கள் விட்டுக் கொடுத்தார்.

அதன் பின் ஆடிய கொல்கத்தா அணிக்கு துவக்க வீரர்களான சுப்மன் கில் மற்றும் வெங்கடேஷ் அய்யரும் டெல்லி அணியின் பந்து வீச்சை வெளுத்து வாங்கினர்.

இவர்கள் இருவரையும் வீழ்த்த முடியாமல் டெல்லி அணி திணறியது. அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த வெங்கடேஷ் அய்யர் 55 ஓட்டங்கள் எடுத்த நிலையில், ரபாடா பந்து வீச்சில் வெளியேறினார்.

அதன் பின் வந்த நிதிஷ் ராணா 13 ஓட்டங்களில் வெளியேற, சுபமன் கில்லும் 46 ஓட்டங்கள் எடுத்த நிலையில், நார்ட்டஜி ஓவரில் அவுட் ஆகினார்.

அதன் பின் ஆட்டம் அப்படியே டெல்லி பக்கம் திரும்பியது. இதனால் கடைசி ஓவரில் கொல்கத்தா அணியின் வெற்றிக்கு 7 ஓட்டங்கள் தேவைப்பட்ட போது, அஸ்வின், கொல்கத்தா அணி வீரர்களான ஷகிப் அல் ஹசன் மற்றும் சுனில் நரைனை அடுத்தடுத்து வெளியேற்றியதால். கடைசி இரண்டு பந்தில் 6 ஓட்டம் தேவை என போட்டி பரபரப்பாகியது.

ஆனால், இந்த பரபரப்பு எல்லாம் வேண்டாம் என்பது போல், களத்தில் இருந்த திரிப்பாட்டி ஐந்தாவது பந்தை சிக்ஸருக்கு பறக்கவிட்டு கொல்கத்தா அணியின் வெற்றியை உறுதி செய்தார்.

இந்த வெற்றியின் மூலம் கொல்கத்தா அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

இன்றைய போட்டி தான் இந்த ஆண்டி மிகவும் தரமான ஐபிஎல் போட்டியாக இருந்துள்ளது என்றும், கடைசி ஓவரில் ஆட்டத்தை ஒரு முறை டெல்லி பக்கமே அஸ்வின் கொண்டு சென்றுவிட்டார். உண்மையிலே இது தான் தரமான ஐபிஎல் போட்டி என்று ரசிகர்கள் இணையத்தில் குறிப்பிட்டு வருகின்றனர்.

SHARE