டி20 உலகக் கோப்பை போட்டிக்கான இந்திய அணியின் புதிய ஜெர்சி வெளியீடு!

18

 

டி20 உலகக் கோப்பை போட்டிக்கான இந்திய அணியின் புதிய ஜெர்சியை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் அக்டோபர் 17 முதல் நவம்பர் 14 ஆம் திகதி வரை நடைபெறுகிறது.

புதிய ஜெர்சியில் இருக்கும் வடிவங்கள் பில்லியன் கணக்கான ரசிகர்களின் ஆரவாரத்தால் ஈர்க்கப்பட்டவை என பிசிசிஐ குறிப்பிட்டுள்ளது.

இந்த ஜெர்சியை இந்திய கிரிக்கெட் அணியின் அதிகாரப்பூர்வ கிட் ஸ்பான்சரான MPL Sports அறிமுகப்படுத்தியுள்ளது.

இது ஒரு அணி மட்டுமல்ல, அவர்கள் இந்தியாவின் பெருமை. இது வெறும் ஜெர்சி அல்ல, ஒரு பில்லியன் ரசிகர்களின் ஆசீர்வாதம். இந்திய அணியை உற்சாகப்படுத்த தயாராகுங்கள் என்று MPL Sports ட்வீட் செய்துள்ளது.

SHARE