அடக்க முடியாத இந்த அரசாங்கத்தை விரட்டியடிக்க வேண்டிய காலம் வந்துள்ளதாக ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா

அடக்க முடியாத இந்த அரசாங்கத்தை விரட்டியடிக்க வேண்டிய காலம் வந்துள்ளதாக ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் பேசும் போதே அவர் இதனை கூறி்யுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

அரசாங்கத்தின் அரசியல் தலைவர்கள் தேர்தலில் வெற்றிப்பெற்ற பின்னர், மக்களை ஏமாற்றி, அவர்களை கொல்லாது கொன்று வருகின்றனர்.

தனிப்பட்ட நிகழ்ச்சி நிரலுக்கு முக்கியத்துவம் வழங்கும் இந்த தலைவர்களை விரட்டியடிக்கும் காலம் வந்துள்ளது. நேர்மையான அரசியல்வாதிகளே எமக்கு தேவை.

இந்து சமுத்திரத்தின் நித்திலம் என்ற எமது சிறிய தங்கமான இலங்கை என்ற நாடு, இன்று எவ்வித பலனும் கொடுக்காத நாடாக மாறியுள்ளது.

நாட்டை அழிக்கும் இரத்தத்தை உறிஞ்சும் நபர்களுடன் இந்த பயணத்தை மேற்கொண்டால், நாய்களுடன் உறங்கி செல்களுடன் எழுந்திருக்க வேண்டிய நிலைமை ஏற்படும். அந்த நிலைமை உருவாகி விட்டது.

கெடுதியான வேலைகளை செய்யும் நபர்களுக்கு அரசியலில் இன்று முன்னுரிமை கிடைத்துள்ளது. வேட்பாளர்கள் சிறுவர் துஷ்பிரயோகங்களில் ஈடுபடுகின்றனர். கொள்ளையர்கள் இன்று அரசியல்துறைக்குள் வந்துள்ளனர்.

நீதி, நியாயத்திற்கு இடமில்லை. நாட்டின் இன்றைய அரசியலுக்கு முடிவுக்கு கட்ட வேண்டிய தருணம் வந்துள்ளது எனவும் பொன்சேகா கூறியுள்ளார்.