மீண்டும் மகிந்தவுடன் மோதி சிறை போக ஆசைப்படும் பொன்சேகா

 

எதிர்வரும் தேர்தல்களின் பின்னர், நாட்டின் மிகவும் பலமான கட்சி எமது ஜனநாயகக் கட்சி தான் என்பதை நிரூபித்துக் காட்டுவேன் என முன்னாள் இராணுவ தளபதியும் ஜ.க.வின் தலைவருமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், ‘எதிர்வரும் தேர்தல்களுக்கான பிரசார நடவடிக்கைகளை எதிர்வரும் நாட்களில் ஆரம்பிக்கவுள்ளோம். அடுத்த தேர்தலின் போது, அரசாங்கத்தில் 75 ஆயிரம் வாக்குகளைப் பறிப்போம். இந்த வாக்குகள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கானவை.

இந்த நிலைமை நீடித்து, ஒரு வருடத்தின் பின்னர் நடைபெறும் தேர்தலின் போது 5 அரசாங்கத்துக்குச் சேர வேண்டிய 5 இலட்சம் வாக்குகளையும் நாமே பெற்றுக்கொள்வோம். இந்த நிலைமை ஏற்பட்ட பின்னர், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினால் திரும்பவும் எழவே முடியாது போகும்’ என அவர் குறிப்பிட்டார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை உயர்ந்த நிலைக்கு கொண்டு சென்றவர் பண்டாரநாயக்க. ஆனால், அதே கட்சியை அழித்தவர் ராஜபக்ஷ. இது குறித்து நாம் கவலையடைகின்றோம்’ என்று பொன்சேகா மேலும் கூறினார்.

Sarath-Fonseka_2225657b