நிலைமைகள் அறிந்த வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா- அரசாங்கத்திற்கு வக்காளத்து வாங்கும் விநாயகமூர்த்தி முரளிதரன்

இலங்கை குறித்து நன்கறிந்த வெளிவிவகார அமைச்சர் ஒருவர் இந்தியாவில் நியமிக்கப்பட்டுள்ளதாக மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

மட்டக்களப்பு – களுதாவளை மகா வித்தியாலயம் மற்றும் பழுகாமம் கண்டுமணி மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் உயர்தர விஞ்ஞான தொழில்நுட்பப் பிரிவினை திறந்து வைக்கும் வகையிலேயே இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன்;

அண்டைய நாடான இந்தியாவில் அரசியல் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

நட்புறவை இந்திய அரசாங்கம் பேணிக்கொண்டு மேலும் கூடுதலான அபிவிருத்திகளையும் கூடுதலான வழங்களையும், இலங்கை அரசாங்கத்திற்கு கூடுதலான நன்மதிப்பையும் உலகத்தில் ஏற்படுத்துவதற்கு சிறந்த ஒரு களமாக தற்பொழுது இந்தியா மாற்றப்பட்டிருக்கின்றது.

நான் நினைக்கின்றேன் எங்களது மதிப்பிற்குரிய மோடியுடைய அரசாங்கம் சார்க் நாடுகளுடன் சிறந்த நட்புறவைப் பேணி சிறந்த ஒரு அமைதியான சூழ்நிலையை பிராந்தியத்தில் ஏற்படுத்துவதற்கு வழிவகுக்கின்ற ஒரு அரசாங்கமாக தற்பொழுது மாற்றமடைந்துள்ளது என்றார்.

அத்துடன், இந்திய வெளிவிவகார அமைச்சராக சுஸ்மா சுவராஜ் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

அவர் ஏற்கனவே இங்கு வந்திருந்தபோது, வன்னியில் உள்ள இடம்பெயர்ந்த முகாமிற்கு அவரை நான் தான் அழைத்துச் சென்றேன்.

நிலைமைகளறிந்த ஒரு வெளிவிவகார அமைச்சராக அவர் காணப்படுகின்றார் எனவும் தெரிவித்தார்.

karuna-praba-and-karuna-mara