பொலிஸ் உத்தியோகஸ்தர் உட்பட மூன்று பேர் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

imgp1486

பெண்களுடன் விடுதிகள் மற்றும் ஹொட்டல்களுக்கு செல்லும் செல்வந்த வர்த்தகர்கள், உயர் பதவிகளை வகிக்கும் நபர்களை அச்சுறுத்தி லட்சக்கணக்கில் கப்பம் பெற்ற குழு பொரள்ளை பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளது.

கோடிஸ்வர வர்த்தகர் ஒருவரின் மகன், முன்னாள் பொலிஸ் உத்தியோகஸ்தர் உட்பட மூன்று பேர் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் பாணந்துறை வலானை மோசடி தடுப்பு பிரிவின் அதிகாரிகள் எனக் கூறி, ஹொட்டல்களுக்கு செல்லும் ஜோடிகளை அச்சுறுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கப்ப பணத்திற்கு பதிலாக விடுதி அறைகளுக்கு வரும் ஜோடிகள் அணிந்திருக்கும் தங்க ஆபரணங்களையும் கப்பமாக பெற்றுள்ளதாக கைது செய்யப்பட்ட நபர்களிடம் மேற்கொண்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட மூன்றாவது நபர் 10 வருட காலமாக ஜப்பானில் தொழில் புரிந்து விட்டு நாடு திரும்பிய பறங்கி இனத்தவர் எனவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

இவ்விதமான அச்சுறுத்தி பெறும் கப்ப பணத்தை பயன்படுத்தி இவர்கள் மூவரும் கசினோ சூதாட்டத்திற்கு செலவிட்டு வந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது