பிறந்தநாள் விழாவில் பாலாவின் புகழாரம்

இளையராஜா தனது 71 வது பிறந்தநாளை மரக்கன்று நட்டு கொண்டாடினார். இவ்விழாவில் இயக்குனர் பாலா அவர்கள் கலந்து கொண்டு இசைஞானியை மனம் திறந்து பாரட்டியுள்ளார்.

இதில் பாலா கூறியிருப்பது ‘ஒரு தனியார் இதழில் இளையராஜா எழுதிய கேள்வி பதிலை அது வெளியானபோதே படித்தேன். இருந்தாலும், நேற்று இரவு மீண்டும் அதை வாசித்தேன். அப்போது அவர் சொல்லியிருந்த இரண்டு விஷயங்கள் என்னை வெகுவாக பாதித்தன. ஒன்று, நான் எழுதியுள்ள இந்த கேள்வி பதிலால் யாருடைய மனதும் புண்பட்டிருந்தால் நான் வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன் என்று ஒரு இடத்தில் குறிப்பிட்டிருந்தார். அதில் அவரது பெருந்தன்மை வெளிப்பட்டிருந்தது.

இதேபோல், நட்பு பெரிதா? உறவு பெரிதா? என்று அவரிடம் கேட்ட கேள்விக்கு, நட்பு, உறவு ரெண்டுமே ஒன்னுதானய்யா என்று பதில் அளித்திருந்தார். அதில் அவரது பக்குவத்தையும், பரந்த மனப்பான்மையையும் வெளிப்பட்டிருந்தது. இந்த மாதிரியெல்லாம் அவரை தவிர வேறு யாராலும் பதில் சொல்ல முடியாது. அதற்காக அவரது பாதங்களைத் தொட்டு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்’ என்றார்.