தமன்னா படத்தில் ஒரு பாட்டுக்கு ஆடுகிறார் ஸ்ருதி

 தமன்னா ஹீரோயினாக நடிக்கும் படத்தில் ஒரு பாட்டுக்கு ஆடுகிறார் ஸ்ருதி ஹாசன். இந்தி சினிமாவை தொடர்ந்து தெலுங்கிலும் படு கவர்ச்சி நடிகையாக வலம் வருகிறார் ஸ்ருதி ஹாசன். ரேஸ் குர்ரம் படத்தில் பாடல் காட்சிகளில் அவரது நடனமும் ஸ்டைலும் ரசிகர்களை கிறங்கடித்தது. இதனால் தெலுங்கில் மகேஷ்பாபு ஜோடியாக தமன்னா நடிக்கும் ஆகடு படத்தில் ஒரு பாட்டுக்கு டான்ஸ் ஆட அவரை கேட்டுள்ளனர். தமன் இசையமைக்கும் இந்த பட பாடல்கள் அனைத்தும் ரெடியாகிவிட்டது.

ஸ்ருதி ஆட வேண்டிய அந்த பாடல், குத்தாட்ட பாடலாக தயாராகியுள்ளது. இதில் அதிக கவர்ச்சி தேவைப்படுவதால் ஸ்ருதி இந்த பாடலுக்கு டான்ஸ் ஆடினால் நன்றாக இருக்கும் என பட யூனிட் விரும்புகிறது. ஒரு பாடலுக்கு நடனம் ஆட வந்த வாய்ப்புகளை மறுத்து வரும் ஸ்ருதி, இதில் கண்டிப்பாக டான்ஸ் ஆடுவார் என டோலிவுட் பட்சி சொல்கிறது. காரணம், மகேஷ்பாபுவின் அடுத்த படத்தில் ஹீரோயினாக நடிக்க அவர் புக் ஆகியுள்ளார். அந்த வாய்ப்பை தக்க வைக்க இந்த வாய்ப்பை அவர் டிக் அடிப்பார் என்றே தெரிகிறது