அரசாங்கத்திற்கு எதிராக ஐ.நா விசாரணைக் குழுவிடம் 230,000 முறைப்பாடுகள்?

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை ஆணையாளர் நவனீதம்பிள்ளையினால் நிறுவப்பட்ட விசாரணைக்குழுவிடம் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக பாரியளவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

நியூசிலாந்து நீதவான் கட்ரைட் உள்ளிட்ட 12 பேர் அடங்கிய விசாரணைக்குழுவினர் இலங்கை தொடர்பிலான விசாரணைகளை நடத்த உள்ளனர்.

இந்த விசாரணைக்குழுவினரிடம் 229,028 போலி மகஜர்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழகத்தில் உள்ள புலி ஆதரவாளர்களினால் இந்த மகஜர்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

போலி முறைப்பாடுகளை செய்யும் நடவடிக்கையின் பின்னணியில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் ருத்ரகுமாரன் செயற்பட்டு வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.