அலுத்கம தாக்குதல் சம்பவம் குறித்து- ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ

 

அலுத்கம தாக்குதல் சம்பவம் தொடர்பில் பூரண அளவிலான விசாரணை நடத்தப்படும்; என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அறிவித்துள்ளார். தற்போது பொலிவியாவிற்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி டுவிட்டரின் ஊடாக இதனைத் தெரிவித்துள்ளார். சட்டத்தை கையில் எடுத்துக்கொள்ள ஒருவருக்கும் இடமளிக்கப் போவதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். குற்றச் செயல்களி;ல் ஈடுபட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

சம்பவத்துடன் தொடர்புடைய அனைத்து தரப்பினரும் அமைதியை பேண வேண்டியது அவசியமானது என அவர் வலியுறுத்தியுள்ளார். அலுத்கமவில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தி குற்றவாளிகளை தண்டிக்கப்படுவர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பௌத்தர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் அண்மையில் மோதல் சம்பவமொன்று இடம்பெற்றிருந்த நிலையில், நேற்றைய தினம் பொதுபல சேனா அமைப்பு குறித்த பிரதேசத்தில் கூட்டமொன்றை நடத்தியிருந்தது. இந்தக் கூட்டத்தின் பின்னர் மீண்டும் கலவரம் வெடித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. மோதல்களைத் தொடர்ந்து அலுத்கம மற்றும் பேருவளை காவல்துறை பிரிவுகளுக்கு உட்பட்ட பகுதிகளில் காவல்துறை ஊரடங்குச் சட்டம் அறிவிக்கப்பட்டது.