அமெரிக்காவில் நிர்வாண யோகா வகுப்புகள்

4878Yoga4அமெரிக்காவின் நியூயோர்க் நகரிலுள்ள நிறுவனமொன்று நிர்வாண யோகா வகுப்புகளை நடத்துகிறது. அந்நிலையத்தில் ஆண்களும் பெண்களும் நிர்வாண நிலையில் யோகாசனத்தில்

ஈடுபடுகின்றனர்.

 

இது பாலியல் உணர்வுகளைத் தூண்டுவதற்கான வகுப்புகள் அல்ல என இந்நிறுவனம் கூறுகிறது.
‘இந்த நிர்வாண யோகா வகுப்பில் பாலியல் ரீதியான எவ்வித தொடுதல்களுக்கும் இடமில்லை. அவ்வாறான நடவடிக்கைகள் சகித்துக்கொள்ளப்பட மாட்டாது. அவ்வாறான செய்கையில் ஈடுபடுபவர்கள் உடனடியாக வெளியேறுமாறு உத்தரவிடப்படுவார்கள்.

 

நிர்வாணத்தை பாலியலுடன் பலர் தொடர்புபடுத்தினாலும் நிர்வாண யோகா வகுப்பிலுள்ள உண்மையிலிருந்து நீங்கள் விலகியிருக்க முடியாது. இது உங்கள் சொந்த தோலுடன் சௌகரியமாகவும் நம்பிக்கையுடனும் இருப்பதாகும்’ என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
யோகாசன வகுப்பில் நாம் நிர்வாணமாக இருக்கும்போது நாம் அனைவரும் ஒரே மாதரியானவர்களாகவே இருக்கிறோம் என இந்த பயிற்சியில் கலந்துகொண்ட வனேசா கென்னடி எனும் பெண் ரோய்ட்டரிடம் கூறியுள்ளார்.

 

நிர்வாண யோகாசன வகுப்பில் சிலர் பாலியல் தூண்டல்களுக்கு உள்ளாகின்றனர். ஆனால் அவ்வாறு அரிதாகவே நடைபெறுகிறது என யோகாசன ஆசிரியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

4878Yoga1 4878Yoga3