உலக கோப்பை கால்பந்து: ரொனால்டோ சாதனையை குளுஸ் சமன் செய்தார்

பிரேசிலை சேர்ந்த ரொனால்டோ உலக கோப்பை போட்டியில் அதிக கோல்கள் அடித்த சாதனை வீரராக உள்ளார். 1998, 2002, 2006 ஆகிய 3 உலக கோப்பையில் விளையாடி 15 கோல்கள் (19 ஆட்டம்) அடித்து உள்ளார்.

அவரது சாதனையை ஜெர்மனி வீரர் மிரோஸ்லாவ் குளூஸ் சமன் செய்தார். கானாவுக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் அவர் 71–வது நிமிடத்தில் கோல் அடித்தார். அவர் 2002, 2006, 2010 ஆகிய 3 உலக கோப்பையில் ஆடி 14 கோல்களில் இருந்தார். நேற்றைய கோல் மூலம் 15 கோல்கள் அடித்து ரொனால்டோவை சமன் செய்தார்.

உலக கோப்பை போட்டியில் 10–க்கும் மேற்பட்ட கோல்கள் அடித்த வீரர்கள் வருமாறு:–

ரொனால்டோ (பிரேசில்) – 15

மிரோஸ்லாவ் குளூஸ் (ஜெர்மனி) – 15

ஜெரால்டு முல்லர் (ஜெர்மனி) – 14

ஜஸ்ட் பான்டைன் (பிரான்ஸ்) – 13

பீலே (பிரேசில்) – 12

கோசிஸ் (அங்கேரி) – 11

கிளின்ஸ்மென் (ஜெர்மனி)- 11