அளுத்கம, பேருவளைப் பிரச்சினைகளை வெளிநாட்டுத் தூதுவர்களுக்கும், தூதரகங்களுக்கும் எடுத்துச் சென்று அரசுக்கும் நாட்டுக்கும் அமைச்சர் ஹக்கீம் பெரும் நெருக்கடியை ஏற்படுத்திவிட்டார்

Hakeem+&+Navaneetham+01ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பின் ஆணையாளராக இதுவரை காலமும் இருந்த நவநீதம்பிள்ளை தென்னாபிரிக்காவின் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்தவர். இவரது இடத்துக்கு இப்போது புதிய ஆணையாளராகத் தேர்வு செய்யப்பட்டிருப்பவர் ஜோர்தான் இளவரசரான ராட் செயிட் அல்  ஹ}சைன். அவர் ஒரு முஸ்லிம் ராஜதந்திரி

Hack_Mahi

. கடந்த வியாழக்கிழமை மாலை நடைபெற்ற இலங்கை அமைச்சரவையின் கூட்டத்திற்குத் தலைமை வகித்த இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்த விவரங்களை ஒட்டி அங்கு ஒரு கருத்தை வெளியிட்டிருக்கின்றா

. கடந்த வார இறுதியில் நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகள் குறித்து அந்த அமைச்சரவைக் கூட்டத்தில் அமைச்சர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இந்த நிலையில் அளுத்கம, பேருவளைப் பிரச்சினைகளை வெளிநாட்டுத் தூதுவர்களுக்கும், தூதரகங்களுக்கும் எடுத்துச் சென்று அரசுக்கும் நாட்டுக்கும் அமைச்சர் ஹக்கீம் பெரும் நெருக்கடியை ஏற்படுத்திவிட்டார் என்ற வகையிலான குற்றச்சாட்டுகள் அவர் மீது முன்வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதன்போது கருத்துக் வெளியிட்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ‘ஐ.நாவின் மனித உரிமைகள் ஆணையாளராக நவநீதம்பிள்ளை இருக்கும் போது தமிழர் பிரச்சினையைக் கிளப்பினார்கள். இப்போது அவரது இடத்துக்கு ஒரு முஸ்லிம் வருகின்றார் உடனே முஸ்லிம்கள் விடயத்தைக் கிளப்புகின்றனர்.’ – கடுமையான விசனத்தை வெளியிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.