டோனி கைதாவாரா?

இந்துக்களின் மத உணர்வை புண்படுத்தியதாக இந்திய அணித்தலைவர் டோனிக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது

டோனி விஷ்ணு அவதராத்தில் உள்ள புகைப்படம் ’பிசினஸ் டுடே’ பத்திரிக்கையில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ’கடவுளின் பெரிய ஓப்பந்தங்கள்’ என்ற பெயரில் வந்தது. இந்த படத்தினால் தான் பிரச்சனை வெடித்தது.

அட்டைப்படத்தில் வந்த அந்த புகைப்படத்தில் டோனியின் பல கைகளில் லேஸ் சிப்ஸ், பூஸ்ட் பாக்கெட், கோக், ஷூ உள்ளிட்ட பல பொருட்கள் இருந்தன.

அந்த படம் கடவுள் நம்பிக்கையை புண்படுத்தும் வகையில் இருப்பதாக கூறி ஆந்திராவைச் சேர்ந்த விஸ்வ இந்து பரிஷத் தலைவர் ஒய். ஷ்யாம் சுந்தர் என்பவர் நீதிமன்றத்தில் கடந்த பெப்ரவரி மாதம் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த அனந்தபூர் நீதிமன்றம் டோனியை நேரில் ஆஜராகுமாறு 3 முறை சம்மன் அனுப்பினார். ஆனால் டோனி மூன்று முறையுமே ஆஜராகவில்லை.

இதைத் தொடர்ந்து டோனி ஆஜராகாததால் அவருக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்து ஆந்திர மாநில நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.