முல்லைத்தீவு இராணுவ முகாம் முன் விபத்து- பெண் பலி.

 

Mullai-Aasedin-01

முல்லைத்தீவு இராணுவ முகாமுக்கு முன்பாக இன்று புதன்கிழமை பிற்பகல் 2 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் அந்த இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொருவர் படுகாயமடைந்தார். மோட்டார் சைக்கிளும் காரும் நேருக்குநேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த தண்ணீரூற்றைச் சேர்ந்த குலேந்திரன் சிவகங்காதேவி (வயது 52) என்பவர் அந்த இடத்திலேயே உயிரிழந்தார்.

இவர் முல்லைத்தீவு கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர் என்று தெரிவிக்கப்பட்டது. அதே இடத்தைச் சேர்ந்த செல்லையா கருணாகரன் (வயது – 47) என்பவரே படுகாயமடைந்து முல்லைத்தீவு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பணி முடித்து இருவரும் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்தபோது எதிரே வந்த காருடன் மோதியதில் இந்த விபத்தது ஏற்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.