யாழில் நேற்றிரவு தமிழ் பொலிஸ் மீது பாரிய தாக்குதல்….

தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் மீது இனந்தெரியாத நபர்கள் நேற்றிரவு தாக்குதல் நடத்தியுள்ளனர். படுகாயமடைந்த அவர் சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார் என்று வைத்தியசாலைத் தரப்புத் தெரிவித்தது. அதனைப் பொலிஸாரும் உறுதிப்படுத்தினர்.

யாழ்.பொலிஸ் நிலையத்தில் பணிபுரியும் குறித்த உத்தியோகத்தர் சிவில் உடையில் யாழ். நகரப் பகுதியில் நின்றிருந்த போதே இனந்தெரியாத 3பேர் அவரைத் தாக்கிவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டது. சம்பவத்தையடுத்துப் பொலிஸாரும் புலனாய்வாளரும் வைத்தியசாலையில் குவிந்தனர்.

அது தொடர்பில் விசாரணை மேற் கொண்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.