விசேட அதிரடிப்படையின் கவசவாகனம் மோதியதில் பெண் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில்….

வவுனியா, ஹொரவப்பொத்தானை வீதியில் இன்று திங்கள் கிழமை பிற்பகல் 2.30 மணியளவில்  மோட்டர் சைக்கிளில் பயணித்த பெண்  ஒருவரை மஞ்சள் கடவையில் வைத்து அதே வீதியால் வந்த விசேட அதிரடிப்படையின் (பவள்) கவசவாகனம் மோதியதில் பூந்தோட்டத்தைச் சேர்ந்த வாமதேவன் ரேகா (வயது 35) என்பவர்  படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

P1140317

விபத்தையடுத்து அங்கு ஒன்று திரண்ட மக்கள் இராணுவ கவசவாகனத்தை எடுக்கவிடாது வீதியை மறித்து பொலிசாருடன் முரண்பட்டமையால்  சம்பவ இடத்தில் பொலிசார் குவிக்கப்பட்டதுடன் மக்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். குறித்த

பவள் வாகனச் சாரதி பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் பவள் வாகனமும் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. எனினும் மக்கள் பொலிசாருடன் தொடர்ந்து முரண்பட்டமையால் வவுனியா வைத்தியசாலை சுற்றுவட்டத்தில் இருந்து வவுனியா நகரபள்ளிவாசல் வரையான பகுதி போக்குவரத்துக்கு தடைவிதிக்கப்பட்டு பொலிசார் குவிக்கப்பட்டுள்ளனர். இச் சம்பவம் தொடர்பான  விசாரணைகளை வவுனியா பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

P1140294

P1140285

. தர்ன்