சவூதி அரேபியாவுக்கு பணிப்பெண் வேலைக்குச் சென்ற பிலிப்பைன்ஸ் யுவதியொருவர்

சவூதி அரேபியாவுக்கு பணிப்பெண் வேலைக்குச் சென்ற பிலிப்பைன்ஸ் யுவதியொருவர் எஜமானரின் தாயார் சுடுநீரை வீசியதால் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கோப்பியை துரிதமாக தயாரிக்கத் தவறியமைக்கு தண்டனையாகவே எஜமானரின் தாயார் அவர் மீது சுடுநீரை வீசியதாகக் கூறப்படுகிறது.

சுடுநீரால் முதுகும் கால்களும் அவிந்து வேதனையில் துடித்த அவரை 6 மணி நேரம் கழித்தே எஜமானரின் குடும்பத்தினர் மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இந்நிலையில் மருத்துவமனை உத்தியோகத்தர் ஒருவரின் உதவியுடன் சவூதியிலுள்ள தனது மைத்துனியை அந்தப் பெண் தொடர்பு கொண்டதையடுத்து மைத்துனி மருத்துவமனைக்கு வந்து அவரை மீட்டுள்ளார்.

தற்போது அந்தப் பெண் பிலிப்பைன்ஸ் தூதரகத்தின் பராமரிப்பில் உள்ளார்.