தமிழீழம் கேட்ட பிரபாகரனும்- நாறிமணக்கும் வல்வெட்டித்துறை நகரசபையும்

181

valvettithurai ucபதவி போட்டிகளால் குழப்பங்களுடன் காணப்பட்ட வல்வெட்டித்துறை நகரசபையின் நடவடிக்கைகளை வடமாகாண முதலமைச்சர் மூன்று மாதங்களுக்கு இடைநிறுத்தி உள்ளார்.

வல்வெட்டித்துறை நகர சபையில் கடந்த மூன்று வருடங்களாக தலைமைப் பதவியைக் குறி இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நிர்வாகச் செயலாளர் குலநாயகம் தலைமையிலான குழுவினரால் மேற்கொள்ளப்பட்டு வந்த குழப்பங்களுக்கு வடமாகாண முதலமைச்சர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். தமக்குப் பதவியை விட்டுத் தராவிட்டால், வல்வெட்டித்துறை நகர சபையை முடக்கப் போவதாகத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளருக்கு எச்சரிக்கைக் கடிதம் அனுப்பி வைத்த எஸ்.எக்ஸ்.குலநாயகமும் அவரது குழுவினரும் இணைந்து வல்வெட்டித்துறை நகரசபையை முடக்கி, வல்வெட்டித்துறை மக்களுக்கும், தவிசாளருக்கும் இடையில் முரண்பாடுகளை ஏற்படுத்தி அவர்களை நகரசபை நிர்வாகத்திற்கு எதிராகத்தூண்டிவிடும் வகையில் நகரசபையின் கொடுப்பனவுகளுக்கான அங்கீகாரம் வழங்கமுடியாதெனத் தெரிவித்து தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டது.

அதனைத் தொடர்ந்து திண்மக் கழிவகற்றல், குடிநீர் விநியோகம், அபிவிருத்திச் செயற்பாடுகள் மற்றும் அலுவலர்கள் ஊழியர்களின் வேதனங்கள் என்பனவற்றிற்கான கொடுப்பனவுகள் யாவும் நிறுத்தப்பட்டிருந்தன.
இந்த நிலையில் குழப்பத்தை ஏற்படுத்தி வருகி;னற குலநாயகம் தலைமையிலான குழுவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லாவிடின் வல்வெட்டித் துறை நகரசபையைக் கலைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்களிடம் தவிசாளர் அனந்தராஜ் நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்திருந்தார். இந்த கோரிக்கையின் அடிப்படையில், கடந்த ஜூலை மாதம் 28 ஆம் திகதியில் இருந்து செயற்படும் வகையில் எதிர்வரும் மூன்று மாதங்களுக்கு சபை நடவடிக்கைகள் இடைநிறுத்தி வைக்கப்பட்டதாக முதலமைச்சரினால் பிரகடனப்படுத்த்பபட்டுள்ளது.

ஓய்வு பெற்ற நீதியரசர் அரியலிங்கம் அவர்களைத் தலைவராகக் கொண்ட விசாரணைக் குழு அமைக்கப்பட்டு எதிர்வரும் ஒக்ரோபர் 30 ஆம் தகிதக்கு முன்னர் விசாரணை அறிக்கை கையளி;ககப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதுவரை வல்வெட்டித்துறை நகரசபையின் கொடுப்பனவுகள் மற்றும் அபிவிருத்திச் செயற்பாடுகளைக் கவனி;பபதற்காக உள்ளுராட்சி உதவி ஆணையாளர் ஜக்சீல் அவர்களை முதலமைச்சர் நியமித்து வர்த்தமானியில் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது.

THINAKATHIR NEWS

SHARE