ஜனாதிபதியின் சகோதரர் என்ற காரணத்திற்காக நாம் கோத்தபாயவை நேசிக்கவில்லை. அவரது செயற்திறன் மிக்க சேவையையே நேசிக்கின்றோம்.

அரசியலுக்கு வருமாறு கோத்தபாயவிற்கு, விமல் அழைப்பஅரசியலுக்கு வருமாறு பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவிற்கு, தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச அழைப்பு விடுத்துள்ளார்.

தாய் நாட்டை நேசிக்கும் கோத்தபாய ராஜபக்ச போன்றவர்களின் சேவை தேவைப்படுகின்றது. இவ்வாறானவர்களின் பங்களிப்பின் மூலமே நாட்டை அபிவிருத்தி செய்ய முடியும்.

எனவே, பாதுகாப்புச் செயலாளரை எதிர்காலத்தில் அரசியலில் ஈடுபடுமாறு நான் அழைப்பு விடுக்கின்றேன்.

ஜனாதிபதியின் சகோதரர் என்ற காரணத்திற்காக நாம் கோத்தபாயவை நேசிக்கவில்லை. அவரது செயற்திறன் மிக்க சேவையையே நேசிக்கின்றோம்.

தனது வாழ்க்கையையே முன்னுதாரணமாகக் கொண்டு கோத்தபாய சிறந்த சேவையாற்றி வருகின்றார். இவ்வாறானவர்களின் பங்களிப்பு நாட்டின் அரசியலுக்கு மிகவும் அவசியமாகின்றது.

போரில் ஈடுபட்ட படையினர் சிவில் சமூக அபிவிருத்தி செயற்பாடுகளில் பங்களிப்பு வழங்கி வருகின்றனர்.

ஊரிலிருந்து கொழும்பு வருபவர்கள் காலி முகத்திடலை மட்டுமே பார்வையிடக் கூடிய காலமிருந்தது.

தற்போது பொழும்பில் பல இடங்களை பார்வையிடக் கூடிய வகையில் நகரம் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளது என விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

கோட்டே ஸ்ரீ ஜயவர்தனபுரவில் நடைபெற்ற அபிவிருத்தித்திட்ட அங்குரார்ப்பண நிகழ்வில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.