சூர்யாவுடன் நடிக்கிறார் ஜெயராம்

பிரியாணி படத்துக்கு பிறகு வெங்கட்பிரபு இயக்கும் படம் மாஸ். இதில் சூர்யா, நயன்தாரா, எமி ஜாக்சன் நடிக்கிறார்கள். இதன் முன்னோட்ட படப்பிடிப்புகள் கடந்த சில நாட்களாக சென்னையை சுற்றி நடந்து வருகிறது. அடுத்த வாரம் முதல் சூர்யா நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட இருக்கிறது. இரண்டாவது கட்ட படப்பிடிப்பில்தான் சூர்யா, நயன்தாரா காட்சிகள் படமாக்கப்பட இருக்கிறது.
இந்த நிலையில் படத்தில் சூர்யாவுடன் ஜெயராம் நடிக்க இருக்கிறார் என்கிற தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கெனவே வெங்கட் பிரபு இயக்கத்தில், ஜெயராம், சரோஜா படத்தில் வில்லனாக நடித்திருந்தார். இதில் காமெடி கேரக்டரில் நடிக்க இருக்கிறார். அடுத்த மாதம் நடக்கும் படப்பிடிப்பில் சூர்யாவுடன் இணைந்து நடிக்கிறார். தற்போது ஜெயராம் கமலுடன் உத்தம வில்லன் படத்தில் நடித்து வருகிறார்.