நெட்டில் நடிகை அஞ்சலி திவேதி நிர்வாண படத்தால் பரபரப்பு நடிகை அஞ்சலி திவேதியின் நிர்வாண படம் நெட்டில் வெளியானதால் போலீசில் புகார் தரப்பட்டது. தெலுங்கு, இந்தியில் பல்வேறு படங்களில் நடித்திருப்பவர் அஞ்சலி திவேதி. பாலிவுட்டில் கவனம் செலுத்து வதற்காக இவர் மத்திய பிரதேசத்திலிருந்து மும்பைக்கு குடிபெயர்ந்தார். மால்வானி பகுதியில் வாடகை வீட்டில் தங்கி இருக்கிறார். இணைய தளத்தில் டுவிட்டர் மூலம் ரசிகர்களை தொடர்பு கொண்டு கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்.

இவரது பெயரில் போலி இணைய தள பக்கம் உருவாக்கி அதில் அவரே வெளியிட்டதுபோல் மார்பிங் செய்யப்பட்ட அவரது நிர்வாண படங்கள் வெளியாகி இருந்தது. இதுபற்றி நண்பர் ஒருவர் அஞ்சலிக்கு தகவல் தெரிவித்ததும் அதிர்ச்சி அடைந்தார். அந்த இணைய தள பக்கத்தை பார்த்தபோது பல்வேறு புகைப்படங்கள் வெளியிடப்பட்டிருந்ததுடன் அதற்கு பலர் லைக் கொடுத்திருப்பதை கண்டு மேலும் அதிர்ச்சி அடைந்தார்.

இதுபற்றி மும்பை போலீசில் புகார் செய்தார். இந்த விவகாரம் குறித்து போலீஸ் தரப்பில் கூறும்போது, அஞ்சலி திவேதி கொடுத்த புகார் பதிவு செய்யப்பட்டது. குறிப்பிட்ட இணைய தள பகுதியை தடை செய்வதற்கான பணி மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் இதை வெளியிட்டவரை கண்டுபிடிப்பதற்காக சைபர் கிரைம் போலீசாரின் உதவியும் நாடப்பட்டுள்ளது. தற்போது அந்த இணைய தள பகுதி தடை செய்யப்பட்டது என்றனர்

 

About Thinappuyal