அமெரிக்கத் தூதரகம் முன்பாக ஜே.வி.பியினர் ஆர்ப்பாட்டம்

கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள அமெரிக்கத் தூதரகத்தின் முன்பாக ஜே.வி.பியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அமெரிக்காவின் நடவடிக்கைகளுக்கு எதிராக இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டு வருகின்றது.

பலஸ்தீனம் மீதான தாக்குதல்களைக் கண்டித்து மக்கள் விடுதலை முன்னணியினர் இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக கொள்ளுப்பிட்டி – காலி வீதியில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

TPN NEWS